கேரளாவை மீண்டும் உலுக்க வருகிறது நிஃபா வைரஸ் - பரிசோதனைகள் தீவிரம்

கேரளாவை மீண்டும் உலுக்க வருகிறது நிஃபா வைரஸ் - பரிசோதனைகள் தீவிரம்
கேரளாவை மீண்டும் உலுக்க வருகிறது நிஃபா வைரஸ் - பரிசோதனைகள் தீவிரம்
Published on

கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதை ஒட்டி அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் அடிக்கடி புதிய வகை வைரஸ் தொற்றுகள் பரவுவது வாடிக்கையான ஒன்று. அதன்படி, கடந்த சில நாட்களாக 'தக்காளி காய்ச்சல்' எனப்படும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் அம்மாநிலத்தில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு உடலில் தக்காளியை போல சிவப்பு நிறத்தில் கொப்பளங்கள் ஏற்படுவதால் இது 'தக்காளி காய்ச்சல்' என அழைக்கப்படுகிறது. குழந்தைகளை இந்த காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கும் என்பதால் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பரவுகிறது நிஃபா வைரஸ்

இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இரு தினங்களுக்கு முன்பு சிலருக்கு நிஃபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வவ்வாளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த அரிய வகை வரைஸ் காய்ச்சல் கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவை ஆட்டிப் படைத்தது.

நூற்றுக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சூழலில், 16-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நிஃபா வைரஸ் அந்த மாநிலத்தில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2021-ம் ஆண்டுடன் நிஃபாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து பெருமூச்சு விட்டது கேரளா.

இந்த சூழலில், தற்போது மீண்டும் கேரளாவை உலுக்க வந்திருக்கிறது நிஃபா வைரஸ். ஏற்கனவே இந்த வைரஸின் பாதிப்புகளை கண்டதால் உடனடியாக உஷாராகிவிட்ட கேரள அரசு, மாநிலம் முழுவதும் நிஃபா வைரஸ் பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

நிஃபா அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறும், அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து வைக்குமாறும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com