ஆந்திராவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆந்திரம் மாநிலம் விஜயவாடா மாவட்டத்தின் கொல்லுப்புடியில் பிரகாஷ் என்ற நபர் தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு அந்தச் சிறுமியை வீட்டின் அருகிலேயே பாலிதீன் கவரில் மறைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதனைக் கண்ட பிரகாஷின் மனைவி காவ்துறையில் புகார் அளித்தார்.
இதனையடுத்து தலைமறைவான பிரகாஷை 24 மணி நேரத்தில் போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை ஆந்திரம் மாநிலத்தின் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 35 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணையும் மார்ச் மாதமே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
அதில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையை 9 மாதங்களில் விரைந்து விசாரித்துஸ தீர்ப்பளித்தற்காக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தத் தீர்ப்பு மிகுந்த மன நிறைவை தருவதாக உயிரிழந்த சிறுமியின் தந்தை உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.