கடற்கரையை சுத்தம் செய்வதற்காக தேனிலவை ரத்து செய்த புதுமண தம்பதிகள்

கடற்கரையை சுத்தம் செய்வதற்காக தேனிலவை ரத்து செய்த புதுமண தம்பதிகள்
கடற்கரையை சுத்தம் செய்வதற்காக தேனிலவை ரத்து செய்த புதுமண தம்பதிகள்
Published on

வழக்கமாக புதிதாக திருமணமானவர்கள் தேனிலவு மாதிரியான இன்பச் சுற்றுலாவுக்கு விரும்பி செல்வர். ஆனால் அப்படி செய்யாமல் தங்களது தேனிலவு பயணத்தை ரத்து செய்து விட்டு கடற்கரையை சுத்தம் செய்து வருகின்றனர் கர்நாடகத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள். அவர்களது செயலுக்காக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மற்றும் உலக செய்தி நிறுவனங்கள் வரை செய்திகளாக வெளியிட்டுள்ளன. 

கர்நாடகத்தின் பைந்தூர் பகுதியை சேர்ந்தவர் அனுதீப். டிஜிட்டல் மார்க்கெட்டரான அவர் இயற்கை ஆர்வலரும் கூட. திருமணத்திற்கு பிறகு மனைவி மினுஷாவுடன் இணைந்து குப்பை மேடாக கிடக்கும் கடற்கரையை சுத்தம் செய்து வருகிறார். அங்குள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை அகற்றி வருகின்றனர். 

“நாங்கள் இருவரும் சேர்ந்து ஆரம்பித்த இந்த பணியில் இப்போது நூற்றுக்கணக்கான பேர் இணைந்துள்ளனர். அவர்களது துணையோடு சுமார் 800 கிலோவுக்கும் மேலான கழிவுகளை அகற்றி உள்ளோம். கைகள் கூடினால் கோடி நன்மை என்பதை நாங்கள் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம்” என இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனுதீப். 

அவரது பதிவுக்கு பல இணைய பயனர்கள் லைக்குகளையும், ஹார்டீன்களையும் அள்ளி தெளித்து வருகின்றனர். அதனால் இணையத்தில் அவர்கள் இருவரும் வைரல் டாக்காக மாறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com