கர்நாடக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: 2 காங். எம்.எல்.ஏக்கள் மாயம்!

கர்நாடக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: 2 காங். எம்.எல்.ஏக்கள் மாயம்!

கர்நாடக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: 2 காங். எம்.எல்.ஏக்கள் மாயம்!
Published on

கர்நாடக சட்டபேரவையில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றனர். இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வராததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் 104 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.கவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் வழங்கினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஆளுநரின் முடிவை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்ட விரோதம் என்றும் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்க, தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் எடியூரப்பாவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார். 

இந்த நிலையில், ஆளுநரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், கர்நாடக சட்டப்பேரவையின் சனிக்கிழமை (இன்று) மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை கூடியது. எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு மூத்த உறுப்பினர் போபபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல். ஏக்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் சட்டப்பேரவைக்கு வரவில்லை. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com