நாடாளுமன்றக் கட்டடம்
நாடாளுமன்றக் கட்டடம்எக்ஸ் தளம்

“ரூ.1200 கோடி கட்டடத்தை பாதுகாக்க ரூ.120 பக்கெட்”- ஒழுகிய மழைநீர்.. விமர்சனத்தில் புதிய நாடாளுமன்றம்

மழை நீரில் ஒழுகும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
Published on

மக்களவை, மாநிலங்களவைக் கூட்டங்களுக்காக, அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக இருக்கைகளை உள்ளடக்கியதாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு கடந்த 2020இல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், இந்த கட்டடம், சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு முக்கோண வடிவில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு ’சென்ட்ரல் விஸ்டா' எனச் சிறப்பு பெயரும் சூட்டப்பட்டது. இதற்காக, முதலில் ரூ.971 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது, ரூ.1,000 கோடி வரை சென்றதாகக் கூறப்படுகிறது.

கட்டமானப் பணிகள் நிறைவுற்ற பின்னர், 2023 மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. என்றாலும், அப்போதும் இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் எனவும், பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வலுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது டெல்லியில் பெய்துவரும் கனமழைக்கே அக்கட்டடம் ஒழுகும் நிலையில் வீடியோக்கள் வெளிவருவதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதையும் படிக்க: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை! யார் இந்த முகமது டெய்ஃப்?

நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் இருப்பது இதனால்தானா? ரகசியம் சொன்ன கட்டட வடிவமைப்பாளர்!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, தற்போது நாடாளுமன்றக் கட்டடத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புதுடெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் நுழைவு வாயிலில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கியிருக்கிறது. இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதுபோல, நாடாளுமன்ற கட்டடத்துக்குள் மழை நீர் ஒழுகுவதால், அதனை பிடிக்க நீல நிற பக்கெட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் ஆம் ஆத்மி, “ரூ.1200 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடம் தற்போது 120 ரூபாயில் வாங்கிய பக்கெட்டை நம்பியே இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், “இந்தப் புதிய கட்டடத்தைவிட பழைய நாடாளுமன்றக் கட்டடம் நன்றாகவே இருக்கிறது. குறைந்தபட்சம் பலகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தில் சொட்டுநீர் நிற்கும் வரை ஏன் பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் போகக்கூடாது? இந்த அரசாங்கத்தின்கீழ் கட்டப்பட்ட ஒவ்வொரு புதிய கூரையிலிருந்தும் நீர் சொட்டுவது, நன்கு யோசித்து செய்யப்பட்ட வடிவமைப்பின் ஒரு பகுதியா என மக்கள் கேட்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பாரீஸ் ஒலிம்பிக்: காதலருடன் நைட் அவுட்டிங்.. நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீராங்கனை!

நாடாளுமன்றக் கட்டடம்
புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறப்பு - முக்கிய அம்சங்கள் என்னென்ன?

அதுபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் முடிவுகளுடன் பாஜகவை ஒப்பிட்டிருக்கும் அவர், “புதிய நாடாளுமன்ற லாபி தண்ணீர் கசிகிறது” என விமர்சித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “வெளியே பேப்பர் கசிவு... உள்ளே தண்ணீர் கசிவு...” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுதவிர, பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேறு சிலவற்றிலும் மழை நீர் ஒழுகியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. அந்த வகையில், டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசியும் வீடியோ வெளியானதையும், அயோத்தி ராமர் கோயிலின் கருவறை மற்றும் உள் அறைகளில் தண்ணீர் கசிந்த வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பயனர் விவரங்களை கேட்ட விவகாரம்: இந்தியாவிலிருந்து வெளியேறும் வாட்ஸ்அப்? மத்திய அரசு சொன்ன பதில்!

நாடாளுமன்றக் கட்டடம்
சிறப்பு பூஜைகள் முதல் பிரதமர் மோடியின் உரை வரை...! இன்று திறக்கப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com