உரிய மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு காப்பீட்டை புதுப்பிக்க அனுமதி அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சுற்றுச்சூழல் ஆய்வாளர் எம்.சி.மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி மதன் பி.லோக்கூர் தலைமையிலான அமர்வு உரிய மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் சமர்பிக்காத வாகன உரிமையாளர்களின் வாகன காப்பீட்டை புதுப்பிக்கக் கூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழுடன் வாகனங்கள் இயங்குவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் மாசு கட்டுப்பாட்டு மையங்கள் இருக்க வேண்டும் என்றும் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.