கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து செய்தி குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தெலங்கானா மாநிலத்திற்கு தமிழநாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்குப் பதில் புதிதாக ஆரீப் முகமது கான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.