வங்கக் கடலில் புதிதாக காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
வடமேற்கு, மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் ஒடிஷாவின் வடக்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. ஏற்கனவே வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, மேற்கு இந்தியப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இதனால் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதீத கனமழை பெய்தது.
இந்நிலையில் தற்போது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக கேரளாவில் இன்று அதீத கனமழை பெய்யும் எனப்பட்டுள்ளது. அத்துடன் வடகிழக்கு மாநிலங்களான கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மற்றும் மத்திய இந்தியப் மாநிலங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களின் கடலோரப் பகுதிகள் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.