பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெளியான 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வது என அறியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8 நள்ளிரவு முதல் பிரதமர் மோடி ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை காக்க இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று அதற்கு அர்த்தம் கொடுத்தார். அதுவரை அப்படியொரு வார்த்தையை இந்தியா அறிந்திருக்கவில்லை. அவரது அறிவிப்பை அடுத்து மக்கள் தங்கள் கைகளில் உள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்ற வரிசையில் காத்துக்கிடந்தனர். பலர் அன்றாட தேவைக்குக் கூட பணம் பெற முடியாமல் தவித்தனர்.
வடமாநிலங்களில் பல மைல் தூரத்திற்கு மக்கள் ஏடிஎம் வாசல்களில் நிற்பதை போல வீடியோ காட்சிகள் வெளியாகின. அந்த நிலைமை சீராக சில மாதங்கள் தேவைப்பட்டன. அதன் பிறகு புதியதாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளிட்டது. ஆனால் அந்தப் பணங்களை கையாளுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. புதியதாக வந்த ரூபாய் நோட்டுக்களை பழைய ஏடிஎம் எந்திரங்களில் பொறுத்தும் போது தொழில் நுட்ப ரீதிகாக சங்கடங்கள் எழுந்தன.
பழைய நோட்டுக்கள் அளவுக்கு வடிமைக்கப்பட்ட அந்த எந்திரங்கள் புதிய நோட்டுக்களை சரியாக வெளியிடுவதில்லை. எந்திரங்கள் பணங்களை வெளியே தள்ளும் போது அதன் ஓரங்கள் கிழிய தொடங்கியுள்ளன. அப்படி கிழியும் புதிய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கியில் கொடுத்தால் வங்கி அதிகாரிகள் வாங்க மறுத்து வருவதாக மக்கள் புகார் கூறுகின்றன. முறைப்படி ரிசர்வ் வங்கியில் இருந்து எவ்வித ஆணையும் வராததால் வங்கி ஊழியர்கள் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். ஆகவே பணம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.