மத்திய பட்ஜெட் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள புதிய மொபைல் போன் செயலியை தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது.
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த தடவைதான் முதன்முறையாக காகிதமில்லா அதாவது டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த பட்ஜெட் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள union budget என்ற மொபைல் போன் செயலியை தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ் ஸ்டோரிலிருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.