நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணிக்கு நிறைவடைகிறது. ஜனவரி 1ஆம் தேதிவரை கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதும் செய்திருந்தால் அதனை சரிசெய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஜனவரி 15 முதல் 31ஆம் தேதிவரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும். மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்தாண்டில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கட்டைவிரல் ரேகை ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் பதிவேற்றப்படும் தகவல் கையேடு இந்தாண்டு தமிழ், கன்னடம் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. AIIMS, JIPMER கல்லூரிகளில் சேர தனி நுழைவுத் தேர்வு கடந்தாண்டுவரை நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் நீட் தேர்வு மூலமே அந்த கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.