”நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு பரிந்துரை”- டி.ஆர்.பாலு

”நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு பரிந்துரை”- டி.ஆர்.பாலு

”நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு பரிந்துரை”- டி.ஆர்.பாலு
Published on

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி உள்துறை அமைச்சகம் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைத்துக்கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்களும் இன்று மனு அளித்துள்ளனர். அதன்பின் இது தொடர்பாக திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் உள்துறை அமைச்சகத்தில் இன்று எம்.பி.க்கள் தரப்பிலிருந்து கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அந்த கோரிக்கையை ஏற்று, இக்கோரிக்கையை உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் கடிதம் தந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com