நீட் தேர்வு முறைகேடு: 23 மாணவர்களுக்கு தேர்வில் பங்கேற்க தடை.. தேசிய தேர்வு முகமை கொடுத்த விளக்கம்

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 23 மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைக்கேடு
நீட் தேர்வு முறைக்கேடுமுகநூல்
Published on

நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வுஃபேஸ்புக்

நீட் தேர்வு குளறுபடி குறித்த வழக்கை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த விவகாரம் குறித்து தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குநர் சுபோத்குமார், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 63 மாணவர்கள் மீது புகார் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 23 பேருக்கு நீட் தேர்வில் பங்கேற்பதில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 40 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு முறைக்கேடு
சுயேட்சை வேட்பாளர் டு முதல் பெண் துணைமுதல்வர்| ஒடிசாவில் சாதித்த வழக்கறிஞர்.. யார் இந்த பிரவதி பரிதா

நீட் தேர்வர்கள் ஆயிரத்து 563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பாக மறுஆய்வு செய்ய 4 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழு இன்னும் அறிக்கை சமர்பிக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். குழுவின் அறிக்கைபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுபோத்குமார் கூறினார். நீட் வினாத்தாள் கசியவில்லை என்பதோடு, தேர்வின் புனிதத்தன்மையும் சமரசம் செய்யப்படவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

நீட் தேர்வுக்கு எதிராக மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனுக்கள் மீது இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெறுகிறது.

நீட் தேர்வு முறைக்கேடு
மத்தியப் பிரதேசம்| மாமியாரை 95 முறை கத்தியால் குத்திய மருமகள்.. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com