பொய்யான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்? ஷாக் கொடுத்த காங். கூட்டணி! மாநில வாரியாக நிலவரம்?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் வெளியான முடிவுகள் பெய்யாகி வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், பல இடங்களில் பாஜகவிற்கும் காங்கிரஸிக்கும் இடையே நெக் டூ நெக் போட்டி நிலவி வருவதை காண முடிகிறது.
பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்முகநூல்
Published on

7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணியானது, இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளிலும் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட சூழலில், தற்போது மின்னணுவாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், முன்னிலை வகிக்கும் கட்சியின் நிலவரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இவற்றை தற்போது கூர்ந்து கவனிக்கும்போது, தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக் கணிப்பு முடிவுகள் பொய்யாகிப் போனது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக முகநூல்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொன்னதென்ன?

அதன்படி,

- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 350க்கும் மேற்பட்ட அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும்,

- காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் தாக்ரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) போன்ற எதிர்கட்சிகள் இணைந்து அமைத்த ‘I.N.D.I.A. கூட்டணியானது’ 140 - 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும்

தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.

பொய்யாகிப்போன கருத்துக்கணிப்புகள்?

ஆனால், தற்போதைய முன்னிலை நிலவரங்களை வைத்து பார்க்கும்போது, இந்த கருத்துக்கணிப்புகளின் மூலம் வெளியான முடிவுகள் பொய்யாகி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி, பாஜக 295 தொகுதிகளில் முன்னிலையிலும், காங்கிரஸ் 231 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகின்றனர். இதன்படி பார்த்தால், கிட்டதட்ட பாஜகவுக்காவானது காங்கிரஸை விட 60 தொகுதிகள் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதுமட்டுமன்றி, பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே நெக் டூ நெக் போட்டி நிலவி வருகிறதை பார்க்க முடிகிறது.

pm modi, rahul gandhi
pm modi, rahul gandhipt web

பாஜக கூட்டணிக்கு பயம்காட்டிய I.N.D.I.A. கூட்டணி!

இதன்படி,

ஜம்மு கஷ்மீரில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் பாஜக 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் பாஜக 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது .

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

சண்டிகரில் உள்ள 1 தொகுதியில் காங்கிரஸ் முண்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் I.N.D.I.A. கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது

கேரளாவில் 20 தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி 14 இடங்களிலும், பிற அனைத்துக் கட்சிகளிலும் ஒரேயொரு இடங்களும் பெற்றுள்ளன.

கர்நாடகாவில் 28 தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி 9 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 17 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன

மணிப்பூரில் 2 தொகுதிகளிலும் I.N.D.I.A.கூட்டணி முன்னிலையில் உள்ளன

பிரதமர் மோடி, ராகுல் காந்தி
பிரதமர் மோடி, ராகுல் காந்திpt web

ராஜஸ்தானில் 25 தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி 8 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 14 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன

உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 35 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது

மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகள், பாஜக கூட்டணி 12 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இதன்மூலம், ‘காங்கிரஸ் வெற்றி பெறும் இடங்கள் 140- 160தான் இருக்கும்’ என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பொய்யாகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் காங்கிரஸ் தனித்து 90 - 100 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பாஜக இனி என்ன செய்தாலும்...!

மற்றொருபுரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என பாஜக கூறிவந்ததும் கவனிக்கப்பட வேண்டியது. பாஜக இனி என்ன செய்தாலும் 400 என்ற எண்ணை அடையமுடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இப்படியாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்யான போதும், வெற்றிக்கு தேவையான இடங்களை கூட்டணி கட்சிகளின் தயவால் பாஜக பெறுகிறது. ஆனால் தணித்து 350 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறுமா என்றால், சந்தேகமே...! முடிவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாஜக - காங்கிரஸ்
மக்களவை தேர்தல் முடிவுகள் | டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸை ஓரம் கட்டியதா பாஜக?

கூட்டணி கட்சிகளின் தயவென்றால் என்ன?

மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் இருக்கின்றன. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், 272 தொகுதிகள் தேவை. அதற்கு கீழ்தான் ஒரு கட்சி பெற்றுள்ளது எனில், கூட்டணி கட்சிகள் தயவால் 272 வருவதற்கு தேவையான தொகுதிகளைக் கைப்பற்றி அக்கட்சி ஆட்சி அமைக்கும். அப்படியும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், வெளியிலுள்ள பிற கட்சிகளிடம் கட்சிக்கு ஆதரவு கோரி நிற்கும்.

பாஜக - காங்கிரஸ்
அது என்ன தொங்கு நாடாளுமன்றம்! இந்தியாவில் எத்தனை முறை அமைந்தது? கவிழ்க்கப்பட்டது எத்தனை முறை?

ஆக பாஜக 272 இடங்களில் தனித்து வெற்றி பெறவில்லையெனில், முதலில் கூட்டணி கட்சிகளின் உதவியை கோரும். அதுவும் போதவில்லையெனில், வெளியில் இருந்து கட்சிகளின் உதவியை பெற்று தொங்கு நாடாளுமன்றம் அமைத்து ஆட்சி அமைக்க கூடும்.

இதில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது உள்ள ட்ரெண்ட் தொடர்ந்தால் பாஜக, தன் கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் 290 தொகுதிகள் கொண்டு ஆட்சியை அமைக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com