புதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி

புதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி
புதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி
Published on

மக்களவை தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 50 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணி உடையவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றி பெற்றுள்ள 539 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 233 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் 112 பேர். அதாவது 21 சதவீதம் பேர். இந்த வருடம் அது 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில், 159 பேர் மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளவர். இதுவே 29 சதவீதம். 

கேரளாவின் இடுக்கி தொகுதியில் இருந்து தேர்வாகியுள்ள காங்கிரஸ் எம்.பி டீன் குரியகோஷ் மீது 204 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அச்சுறுத்துதல், கொலைக்கு தூண்டுதல், திருட்டு உள்ளிட்ட வழக்குகள் அதில் அடங்கும்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த 351 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com