ஸ்மிருதி சிங்
ஸ்மிருதி சிங்எக்ஸ் தளம்

கீர்த்தி சக்ரா| வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இப்படி இழிவாக பேசலாமா! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

கீர்த்தி சக்ரா விருது பெற்ற வீரமரணம் அடைந்த கேப்டன் அன்ஷுமன் சிங்கின் மனைவியான ஸ்மிருதி சிங்கைப் பற்றி பயனர் எழுதிய இழிவான கருத்துக்கு அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மகளிர் ஆணையம் டெல்லி காவல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
Published on

இந்திய ராணுவத்தின் 26வது பஞ்சாப் படைப்பிரிவில் சியாச்சின் பனிப்பாறை பகுதியில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், கேப்டன் அன்ஷுமான் சிங். இவர் கடந்த ஆண்டு (2023) ஜூலை 19ஆம் தேதி, சியாச்சினில் பணியில் இருந்தபோது அங்கு இருந்த ஆயுதக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. அதன் உள்ளே சிக்கிக்கொண்டவர்களை கேப்டன் சிங் உடனடியாக மீட்டார். ஆனால், தீவிபத்தில் சிக்கிக்கொண்ட மருத்துவ உபகரணங்களை எடுக்கச் சென்றபோது சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜூலை 22-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரில் கேப்டன் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இவ்விருதை கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங்கிற்கு வழங்கினார்.

இதையும் படிக்க: பெரு|மலையேறிய அமெரிக்க வீரர் பனியில் சிக்கி மாயம்; மம்மி ஆக உறைந்த உடல் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

ஸ்மிருதி சிங்
”அப்பாவை போல ராணுவ வீரர் ஆகனும்”- வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த ரானுவ வீரர் பழனியின் மகன்

சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்ட நிலையில், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதில் டெல்லியைச் சேர்ந்த அகமது.கே என்ற பயனர் ஒருவர், ஸ்மிருதியின் விதவை கோலத்தை வைத்து மிகவும் இழிவான முறையில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக, அவருடைய கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் (NCW) கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்மீது டெல்லி காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், அகமது கே-வை கைதுசெய்து 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது.

இதையும் படிக்க: ஹிஜாப் அணிய மறுத்த பெண்கள்.. துருக்கியின் விமான நிறுவன அலுவலகத்தை மூடிய ஈரான்!

ஸ்மிருதி சிங்
விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

முன்னதாக, விருதைப் பெற்றுக்கொண்ட ஸ்மிருதி சிங் பேசிய வீடியோ ஒன்றை பாதுகாப்புத்துறை பகிர்ந்திருந்தது. அதில், ஸ்மிருதி சிங் தனக்கும் கணவருக்குமான காதல், கல்யாணம், கனவு குறித்து பேசிய விஷயங்கள் பலரையும் நெகிழச் செய்துள்ளது. அதில் அவர், ”நான் கல்லூரியில் முதல் நாள் அவரைச் சந்தித்தேன்.

பார்த்தவுடன் அவர் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிக்க அவர் தேர்வு செய்யப்பட்டார். பொறியியல் கல்லூரியில் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். ஆனால், அவர் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஒருமாத காதலுக்குப் பிறகு, 8 ஆண்டுகள் நாங்கள் தொலைதூர காதலில் (Long distance relationship) இருந்தோம்.

இதையும் படிக்க: சூடுபறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனுக்கு சவால் விட்ட டொனால்டு ட்ரம்ப்!

ஸ்மிருதி சிங்
முதல் பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் சோம்நாத் நினைவு தினம் அனுசரிப்பு

அதன்பிறகு, நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தோம். ஆனால், திருமணமான இரண்டு மாதங்களில் அவர் சியாச்சின் பகுதிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். 2023-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி இரவு நானும் அவரும் நீண்டநேரம் போனில் பேசிக்கொண்டோம். அடுத்த 50 ஆண்டுகளுக்கு இருவரது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்தும், புதிய வீடு கட்டுவது குறித்தும், குழந்தைகள் குறித்தும் நீண்டநேரம் பேசினோம்.

ஆனால், ஜூலை 19-ஆம் தேதி காலையில் அவர் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அடுத்த 7-8 மணி நேரத்திற்கு அந்தத் தகவலை நாங்கள் நம்பவே இல்லை. இப்போது, கையில் கீர்த்தி சக்ரா விருதுடன் நிற்கிறேன். இது உண்மையாக இருக்கலாம் என்று நம்புகிறேன். நாங்கள் எங்களது வாழ்க்கையை நிர்வகித்துக்கொள்ள முடியும். அவர் ஹீரோ. மற்ற 3 ராணுவ வீரர்களையும், அவர்களது குடும்பத்தையும் காப்பாற்ற தனது உயிரை கொடுத்திருக்கிறார்’’ எனக் கூறி கண்ணீர் விடும் காட்சி அனைத்து இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது.

இதையும் படிக்க: ”எனது கிரிக்கெட் மனைவி..” - ராகுல் டிராவிட் குறித்து உருக்கமான பதிவிட்ட ரோகித் சர்மா!

ஸ்மிருதி சிங்
கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனிக்கு வீர் சக்ரா விருது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com