தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2022ஆம் ஆண்டில், 26,508 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2,419 பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்த வழக்குகளும் நீதிமன்றங்களில் விசாரணைக்கு சென்றுள்ளன. ஆனால், 2022ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக 1,98,285 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்த நிலையில், வெறும் 5,067 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, ஒட்டுமொத்தமாக 20,852 பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குகளில் 192 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 12,062 வழக்குகள், உரிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஒட்டு மொத்த பாலியல் வன்கொடுமை வழக்குகளில் வெறும் 2.56 சதவிகித வழக்குகளிலும், பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குகளில் 0.92 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.