டெல்லி விவசாயிகள் சார்பில் இன்று 'ஜக்கா ஜாம்' போராட்டம்!

டெல்லி விவசாயிகள் சார்பில் இன்று 'ஜக்கா ஜாம்' போராட்டம்!
டெல்லி விவசாயிகள் சார்பில் இன்று 'ஜக்கா ஜாம்' போராட்டம்!
Published on

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ஜக்கா ஜாம் எனப்படும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதேநேரத்தில் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த போராட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜிபூர் ஆகிய இடங்களில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். எனினும் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த போராட்டம் நடைபெறாது என்றும், அங்கு விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் விவசாய அமைப்புகள் கூறியுள்ளன.

போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ்கள், பள்ளி வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறியுள்ள விவசாயிகள், இறுதியில் ஒரு நிமிடம் தொடர்ந்து வாகனங்களின் ஒலி எழுப்பப்படும் என்றனர். இதனிடையே, டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

எல்லைகளில் உள்ள சாலைகளில் பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு முள்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. சாலையின் நடுவே உயரமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com