Paytm பேமெண்ட்ஸ் வங்கியின் FASTag இனிமேல் செல்லாது!

விதிமீறல் பிரச்னையில் சிக்கியுள்ள பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை FASTag சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீக்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முகநூல்
Published on

விதிமீறல் பிரச்னையில் சிக்கியுள்ள பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை FASTag சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீக்கியுள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் FASTag பரிவர்த்தனையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது. FASTag சேவை வழங்கும் வங்கிகளின் பட்டியலில் இருந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை நீக்கியதால் அதன்மூலம் வாங்கப்பட்ட FASTag இனி செல்லாது எனக் கூறப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இன்சாட்-3டிஎஸ்.. விஞ்ஞானிகளுக்கு பாராட்டு!

இதனால் சுமார் 2 கோடி பேர் வேறு வங்கிகளில் இருந்து புதிய ஸ்டிக்கர்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக, KYC பிரச்னை காரணமாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதற்கு பிப்ரவரி 29ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து ரிசர்வ வங்கி தெரிவிக்கையில், “மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் மேற்கொள்ளப்படும் டெபாசிட் பரிவர்த்தனைகள், ஃபாஸ்டாக் போன்ற எந்தஒரு சேவையும் செல்லுபடியாகாது.

மேலும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே மார்ச் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் கணக்குகளை வேறு வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளவும்.” என்று அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com