கிராமப்புற நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக மேலும் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தோமர், கடந்த 2012,13ஆம் நிதி ஆண்டுகளில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக பட்ஜெட்டில் இருந்து ரூ.38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மேலும் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அதன்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ரூ.58,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் ஊதிய வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.