கசாக்ஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடனிருந்தனர்.