இன்ஃபோசிஸ் முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி, 2014-இல் தான் பதவி விலகியது தவறான முடிவென்றும், அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியது குறித்து பேசிய நாராயணமூர்த்தி, "தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் இன்ஃபோசிஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகியதற்காக வருந்துகிறேன். பல இணை நிறுவனர்கள், என்னைத் தடுத்தும் நான் அந்த முடிவை எடுத்தது தவறானது. பொதுவாகவே, நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர். அத்தகைய முடிவை எடுத்தது தவறானது" என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 2014-இல், முன்னாள் எஸ்ஏபி ஆணைய உறுப்பினர் விஷால் சிக்கா சிஇஓ-ஆக பதவியேற்றார். அதன்பிறகு, நிர்வாகத்தின் இரண்டாம் நிலையில் நாராயணமூர்த்தி செயல்பட்டு வருகிறார்.
சமீப காலமாக, இன்ஃபோசிஸின் கார்ப்பரேட் நிர்வாகம், சிஇஓ-வின் சம்பளத்தொகை மற்றும் முன்னாள் பணியாளர்களுக்கான நிரந்தர சம்பள நிறுத்தம் ஆகிய விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கியும், விமர்சித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.