நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மையை நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பெற்றது. அதனால் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் இன்று புதுச்சேரியின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்.ரங்கசாமி. நான்காவது முறையாக புதுச்சேரி பிரதேச முதல்வராக அவர் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக 2001, 2006 மற்றும் 2011இல் அவர் முதலமைச்சராக பணியாற்றி உள்ளார்.
ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவி ஏற்றார் ரங்கசாமி. அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறைக்கு சென்று மூன்று கோப்புகளில் கையெழுதிட்டார் ரங்கசாமி.
>நிலுவையில் உள்ள 2 மாதத்திற்கான அரிசி வழங்குவது.
>10 ஆயிரம் நபர்களுக்கு புதிதாக முதியோர் மற்றும் விதவை பென்ஷனுக்கு அனுமதி.
>கல்லூரி மாணவர்களுக்கான CENTAC பணம் வழங்குவது ஆகிய 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.