குஜராத் | வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்.. 8 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில் பரவும் மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த 8 நாட்களில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் - பரவும் மர்ம காய்ச்சல்
குஜராத் - பரவும் மர்ம காய்ச்சல்முகநூல்
Published on

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியிலிருந்த மக்களின் அன்றாட வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டு அவதியடைந்தனர். இதைதொடர்ந்து, தற்போது பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குஜராத்தின் கட்ச் (Kutch) மாவட்டத்தில் உள்ள லக்பத் என்ற தாலுக்காவில் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 8 நாட்களில் 15 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 3 முதல் 7ம் தேதி வரை குழந்தைகள் உட்பட 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். மேலும், 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதுள்ளது.

இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 சிறப்பு மருத்துவர்களும் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் தலைமையில் 50 மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் ஜி.கே. பொது மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளன. 30 வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றுள்ளார்.

கட்ச் மாவட்ட ஆட்சியர் அமித் அரோரா கூறுகையில், “இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எச்.என். 1, பன்றிக்காய்ச்சல், கிரிமியன் - காங்கோ காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்றநோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள லக்பத்தில் 22 கண்காணிப்பு குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குஜராத் - பரவும் மர்ம காய்ச்சல்
ஹரியானா தேர்தல் களம் எப்படி இருக்கு? ஓர் பார்வை!

இறந்தவர்களில் 11 பேரின் மாதிரிகள் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை கொண்டே இது வைரஸ் பாதிப்பா அல்லது புதிய வகை நோயா என கண்டறிய முடியும்” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த காய்ச்சல் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com