பாலியல் குற்றச்சாட்டில் 'சமூக சேவகி' ! சிறுமிகள் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்

பாலியல் குற்றச்சாட்டில் 'சமூக சேவகி' ! சிறுமிகள் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்
பாலியல் குற்றச்சாட்டில் 'சமூக சேவகி' ! சிறுமிகள் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்
Published on

பீகார் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தேடப்படும் சமூக சேவகி மது குமாரி 2015 ஆம் ஆண்டின் மாநில அரசின் சிறந்த சமூக சேவைக்கான விருது பெற்றவர் என அதிர்ச்சிக்குறிய விஷயம் தெரிய வந்துள்ளது. மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது.

அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளதாக அறிக்கை சமர் பித்தது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். முதலில் 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாத கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது.

இந்நிலையில் மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கை வெளியானது. அதில் அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 39 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து மாணவிகளுமே பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் விடுதியில் இருப்பவர்களாலும் அங்கு வருகை தந்தவர்களாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது.

இதையறிந்த நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.  இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டினர். எலும்புக் கூடுகள் ஏதும் சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான பிரஜேஷ் குமார், அவர்தான் இந்த விடுதியை நடத்தி வந்தவர். இவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரஜேஷ் தாக்கூருக்கு வலதுகரமாக செயல்பட்டவர் சமூக சேவகி மது குமாரி. இப்போது தலைமறைவாக உள்ளவருக்கு 2015 ஆம் ஆண்டு பீகார் அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு சார்பில் சிறந்த சமூக சேவகிக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com