உலகிலேயே இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள்தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இதற்காக இஸ்லாமியர்கள் இந்து கலாசாரத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்து என்பது ஒரு மதமோ, மொழியோ அல்ல என்றும் அது இந்தியாவில் வாழும் அனைவரின் கலாசாரம் எனவும் அவர் கூறினார். மாறுபட்ட கலாசாரத்தை கொண்ட இந்தியாவை பிற மதத்தினரும் தேடி வருகிறார்கள் என மோகன் பகவத் குறிப்பிட்டார். யூதர்கள் நாடின்றி தவித்தபோது அவர்களுக்கு அடைக்கலம் தந்த ஒரே நாடு இந்தியாதான் என்று பெருமிதம் தெரிவித்த அவர், பார்சிகள் தங்கள் மதத்தை இந்தியாவில் மட்டுமே சுதந்திரமாக கடைப்பிடிக்க முடிவதாகக் கூறினார். உலகில் மகிழ்ச்சியான இஸ்லாமியர்கள் இந்தியாவில் காணப்படுவதற்கு காரணம் நாம் அனைவரும் இந்துக்களாக இருப்பதே என மோகன் பகவத் தெரிவித்தார்.