ஆசிரியரை சுட்டுக்கொன்ற நபரை போலீஸ் கண்ணெதிரே அடித்துக்கொன்ற மக்கள்

ஆசிரியரை சுட்டுக்கொன்ற நபரை போலீஸ் கண்ணெதிரே அடித்துக்கொன்ற மக்கள்
ஆசிரியரை சுட்டுக்கொன்ற நபரை போலீஸ் கண்ணெதிரே அடித்துக்கொன்ற மக்கள்
Published on

ஆசிரியரை சுட்டுக்கொன்ற நபரை போலீஸ் இருக்கும்போது ஊர்மக்களே அடித்துக்கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கோராக்பூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு வெளியே நின்றுள்ளார். அங்கிருந்த டீக்கடையில் ஒன்றில் ஆசிரியர் சுதிர் குமார் சிங் வருகைக்காக அவர் காத்திருந்தார். அந்த நபரின் சகோதரரின் ஆசிரியர் தான் சுதிர் எனத் தெரியவந்துள்ளது. ஆசிரியர் சுதிர் வந்த உடனே தான் மறைத்து வைத்திருந்த தனது தந்தையின் துப்பாக்கியால் அந்த நபர் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுதிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்த மக்கள் அந்த நபரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒரு கட்டடத்தின் மாடியில் ஏறிய அந்நபர், துப்பாக்கியை காட்டி மக்களை மிரட்டியுள்ளார். அத்துடன் தரையில் சுட்டு மக்களை அச்சுறுத்தியாக தெரிகிறது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அந்நபர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு காவல்துறையினர் தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

அப்போது தப்பி ஓடிய அந்நபரை அங்கு கும்பலாக இருந்த ஊர்மக்கள் பிடித்துள்ளனர். காவல்துறையினர் எதிரிலேயே அந்த நபரை கட்டை, கம்பு ஆகியவற்றால் அந்த கும்பல் தாக்கியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். ஆனால் முழுமையாக தடுத்து அந்நபரை காப்பாற்றவில்லை. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அந்நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com