மூணாறு அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அமைந்துள்ள தலையாறு எஸ்டேட்டின் குடியிருப்பு பகுதிக்குள் இரவில் புகுந்த கொம்பன் காட்டு யானை சர்வ சாதாரணமாக உலா வந்து அப்பகுதிவாசிகளை பீதி அடையச் செய்துள்ளது.
ஒருமணி நேரத்திற்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கொம்பன் காட்டு யானை, வீடுகளை தொட்டுப் பார்த்துவிட்டு வனத்திற்குள் கிளம்பிச் சென்றது. கொம்பன் காட்டு யானையின் வீதி உலாவை அப்பகுதிவாசிகள் வீடியோ எடுத்து வனத் துறையினருக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் காட்டு யானை பயத்தில் உறங்காமல் தவிக்கும் பொதுமக்களை காக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.