“இதுதான் என் குட்டி அறை” - வைரலான மும்பை சொமட்டோ ஊழியரின் வீடியோ; 3 மாத வாடகையை அள்ளிக்கொடுத்த பெண்!

மும்பையை சேர்ந்த சொமாட்டோ டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் தனது வாழ்விடம் பற்றியும், தனது நிலை பற்றியும் வீடியோ ஒன்று எடுத்து இண்ஸ்ட்ராவில் பதிவேற்றம் செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.
அறை
அறைஇண்ஸ்ட்ரா
Published on

இன்றைய நவநாகரீக உலகில் உணவைத்தேடி ஹோட்டல்களுக்கு சென்று பலரும் கஷ்டப்படுவதில்லை. ஆன்லைனில் ஆடர் போட்டால் போதும் உணவு தானாக வீடு தேடி வரும் நிலை தற்போது உள்ளது. வீடு தேடி கொண்டுவரும் ஊழியருக்கு புன்னகையுடன் ஒரு நன்றி சொன்னால்கூட போதுமானது அதை கூட சிலர் சொல்வதில்லை. நமக்காக உணவு சுமந்து வரும் தொழிலாளர்களை ஒரு புழு, பூச்சி போல சிலர் நடத்துவதுண்டு. ஊழியர்களின் வாழ்க்கை நிலை பற்றியோ அவர்களின் பின்புலம் பற்றியோ தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை.

இப்படிப்பட்ட நிலையில், மும்பையைச் சேர்ந்த சொமாட்டோ டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் தனது வாழ்விடம் பற்றியும், தனது நிலை பற்றியும் வீடியோ ஒன்று எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்ந்த சொமாட்டோ டெலிவர் ஏஜெண்ட் ஆக பணியாற்றுபவர் பிரஞ்சாய் போர்கோயரி. இவர் மும்பை மாநகரில் உள்ள ஸ்லம் பகுதியின் பகிரப்பட்ட விடுதி ஒன்றில் வசிக்கிறார். இவர் ஒரு திறமையான பாடகர். மேலும் ஒருகால்பந்து வீரர் கூட...

இவர் தங்கிருக்கும் விடுதி என்றால் நீங்கள் நினைப்பது போல் பத்துக்கு பத்து அறை கூட இல்லை. காலை வைத்தால் அறை முடிந்துவிடும் அது தான் அளவு. அதுவும், கிராமங்களில் சென்றால் மச்சுவீடு என்று சொல்வார்கள். அதாவது மச்சுக்கு செல்லவேண்டுமென்றால் ஒரு ஏணிப்படி உதவியுடன் மேலேறி ஒரு அறைக்குள் செல்லவேண்டும். அந்த அறையில் தேவையில்லாத பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அதுதான் மச்சு... அது போன்றதே பிரஞ்சாய் போர்கோயரி வசித்து வரும் அறையும்.

அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீடியோவில், மிகக்குறுகிய தெருவின் முடிவில் ஒரு இரும்பு ஏணி தெரிகிறது. அதில் அவர் ஏறியவுடன் ஒரு அறை... அதுவும் கையை நீட்டினால் எதிர் சுவர் இடிக்கும். அந்த சுவரும் கரைப்படிந்து காணப்படுகிறது அங்கு அடுக்கி வைக்கப்பட்ட சில பெட்டிகள் மற்றும் அவரது துணிகள்... அப்படிப்பட்ட இடத்தில் தனது நண்பன் மற்றும் ஒரு பூனையுடன் ஆக... மூன்று பேர் அவ்விடத்தில் வசித்து வருகின்றனர். இதற்கு வாடகையாக மாதம் 500 ரூபாய் செலுத்தி வருகிறாராம். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்ட்ரா தளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ஒரு பெண் அவர் மீது வருத்தம் கொண்டு தான் மூன்று மாத வாடகையை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இத்தனை ஏழ்மையிலும் உழைத்து சாப்பிட்டு வரும் அவரை பலர் பாராட்டினாலும், அவரின் மூன்று மாத வாடகை தொகையை ஒரு பெண் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com