இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு தேசிய விமான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் பிர்ஜு கிஷோர் சல்லா. இவர் கடந்த ஆண்டும் அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து
டெல்லி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார். விமானம் அகமதாபாத் நிலையத்தில் இருந்தபோது, திடீரென விமானம்
கடத்தப்பட்டுள்ளதாகவும், கை கழுவும் அறையில் வெடிகுண்டு வைக்கபட்டுள்ளதாகவும் பைலட்டிற்கு, சல்லா எச்சரிக்கை கொடுத்தார்.
இதையடுத்து அவர் விமானத்தை கடத்தும் குற்றத்திற்கான சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜெட் ஏர்வேஸ், சிவில் விமான போக்குவரத்து துறையிடம் பரிந்துரை
செய்திருந்தது. இந்நிலையில் சல்லாவிற்கு ‘நோ ஃப்ளை லிஸ்ட்’ விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய விமான பயணத்தடை அவருக்கு
வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை விமான பயணங்களில் பாதுகாப்பிற்காக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டதாகும். இந்த தகவலை
சிவில் விமானப்போக்குவரத்து துறை பொதுஇயக்குநர் உறுதி செய்துள்ளார்.