இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்தாலும் டிராஃபிக்கில் சிக்குவது பெரும் சிக்கல்தான். அதுவும் மழை காலமென்றால் என்னத்தச் சொல்ல என அதிருப்தி தெரிவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள்.
ஒரு பக்கம் மழை, ஒரு பக்கம் டிராஃபிக்கை சமாளிக்க cab, auto பிடித்தாவது வீட்டுக்கு சென்றிடலாம் என எண்ணி அதற்காக செயலியில் புக் செய்ய முற்பட்டால் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அப்படியான சம்பவம் குறித்துதான் இப்போது பார்க்கப் போகிறோம்.
மும்பையில் அண்மை நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
அந்த வகையில், சரவணகுமார் சுவர்ணா என்ற நபர் ஒருவர் dadar-ல் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல பிரபல தனியார் டாக்சி நிறுவனமான uber செயலில் cab புக் செய்யச் சென்று அதில் குறிப்பிட்டுருந்த கட்டணத்தை கண்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றிருக்கிறார்.
அதனை screenshot எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சரவணகுமார் சுவர்ணா, கோவாவுக்கு விமானத்தில் சென்றால் கூட இவ்வளவு செலவு ஆகாது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். சரவணகுமார் பகிர்ந்த அந்த screenshot-ல் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரத்து 159 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டதை காணலாம்.
இதனைக் கண்ட இணையவாசிகள், uber cab கட்டணத்துக்கு நாசிக்கின் புறநகர் பகுதியில் ஒரு வீடே வாங்கிவிடலாம் என்று பதிவிட்டிருக்கிறார்கள்.
ஆனால், மும்பை போன்ற நகரங்களில் மழைக்காலத்தின் போது டாக்சிகளுக்கான தேவை மிகவும் அதிகரிக்கும் பட்சத்தில் இது போன்று கட்டணங்களும் உயரும் என அச்சேவை தரும் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.