OTP விவரம் இல்லாமல் ரூ.17 லட்சம் திருடப்பட்டது எப்படி?- மும்பை போலீசார் விசாரணை!

OTP விவரம் இல்லாமல் ரூ.17 லட்சம் திருடப்பட்டது எப்படி?- மும்பை போலீசார் விசாரணை!
OTP விவரம் இல்லாமல் ரூ.17 லட்சம் திருடப்பட்டது எப்படி?- மும்பை போலீசார் விசாரணை!
Published on

பணபரிவர்த்தனை சேவை தொடர்பாக சில வசதிகள் தருவதாக போன் செய்த நபரிடம் வங்கி விவரங்களை அளித்த மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மகாதேவ் (69). இவர் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளார். மேலும் வெளிநாட்டில் வசித்து வரும் மகள் மற்றும் மகனின் வங்கி கணக்கையும் அவரே நிர்வகித்து வந்துள்ளார். பிரகாஷ், தன்னுடைய செல்போன் எண்ணையே 3 கணக்குடனும் இணைத்து வைத்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி பிரகாஷுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், தான் பணபரிவர்த்தனை சேவை தொடர்பாக சில வசதிகள் செய்து தருவதாகவும், அதற்கு வங்கிக் கணக்கின் விவரங்களை தருமாறும் கேட்டுள்ளார்

வங்கி அதிகாரியைப்போல தெளிவாக பேசியதால் சந்தேகம் அடையாத மருத்துவர் பிரகாஷ், வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது எண்ணுக்கு OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் வந்துள்ளது. உடனடியாக ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த மருத்துவர், வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கை முடக்கியுள்ளார். அதற்குப்பின் ஜனவரி 21-ம் தேதி வங்கிக்குச் சென்ற பிரகாஷ், கணக்கு விவரங்களை சரிபார்த்துள்ளார்.

அப்போதுதான் அவரது இரு கணக்கில் இருந்து 17 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த மருத்துவர் பிரகாஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக, தான் OTPயை பகிர்ந்து கொள்ளாதபோதும் கணக்கில் இருந்து பணம் எப்படி எடுக்கப்பட்டது என பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். OTP இல்லாமல் பணபரிவர்த்தனை எப்படி நடந்தது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com