தனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்

தனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்
தனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்
Published on

மும்பை அருகே வீட்டில் தனியாக வசிக்கும் ஒரு மூதாட்டியின் பிறந்த நாளை அப்பகுதி உள்ள காவல் அதிகாரிகள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வித்துள்ளனர்.

மும்பை அருகே வாட்லாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 20 வருடங்களாக தனியாக வசித்து வருபவர் மூதாட்டி லலிதா சுப்பிரமணியன். இவரது மூன்று பிள்ளைகளும் பணி நிமித்தமாக அமெரிக்கா மற்றும் பெங்களூரூவில் வசித்து வருகின்றனர். தனியாக வசிக்கும் மூதாட்டி லலிதாவுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் மருத்துவ சிகிச்சைக்காக உடன் செல்வதிலும் மாதுங்கா காவல் துறையினர் உதவியாக இருந்து வந்துள்ளனர்.

தாய் போல கவனித்து வந்த காவலர்கள், மூதாட்டி லலிதாவின் 83-ஆவது பிறந்தநாளில் அவரது வீட்டில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பெற்ற பிள்ளைகளைப் போன்று அந்தக் காவலர்கள் அளித்த இன்ப அதிர்ச்சியை கண்டு மூதாட்டி லலிதா சுப்பிரமணியன் பூரிப்பில் திளைத்‌தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com