சிறுமிக்கு அவசரமாக தேவைப்பட்ட ரத்தம்: விரைந்து சென்று உதவிய காவலர்!

சிறுமிக்கு அவசரமாக தேவைப்பட்ட ரத்தம்: விரைந்து சென்று உதவிய காவலர்!
சிறுமிக்கு அவசரமாக தேவைப்பட்ட ரத்தம்: விரைந்து சென்று உதவிய காவலர்!
Published on

14 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வழங்கிய காவலருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்

மும்பையைச் சேர்ந்த காவலர் ஆகாஷ் 14 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வழங்கியுள்ளார். திடீர் தேவை என்பதால் பணியில் இருந்த ஆகாஷ் மருத்துவமனைக்கு விரைந்து ரத்தம் கொடுத்துள்ளார். இது குறித்து காவல் ஆணையர் பரம்பீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 14 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக A+ ரத்தம் தேவைப்பட்டது. புயல் பாதிப்பு காரணமாக சிறுமியின் குடும்பத்தினரோ நண்பர்களோ மருத்துவமனைக்கு வர முடியவில்லை. அதனால் காவலர் ஆகாஷே ரத்தம் கொடுத்துவிட்டார் என தெரிவித்துள்ளார். தனது பதிவுடன் போலீசார் ரத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

காவல் ஆணையர் பதிவிட்ட இந்த பதிவு தற்போதும் வைரலாகி வருகிறது. பலரும் காவலர் ஆகாஷுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மும்பை காவல்துறைக்கும், காவலர் ஆகாஷுக்கும் தலைவணங்குவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com