பஸ் ஓட்டும் போது திடீரென நெஞ்சுவலி; சாதுர்யமாக பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

பஸ் ஓட்டும் போது திடீரென நெஞ்சுவலி; சாதுர்யமாக பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்
பஸ் ஓட்டும் போது திடீரென நெஞ்சுவலி; சாதுர்யமாக பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்
Published on

மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (Brihanmumbai Electric Supply and Transport – BEST) துறையில் ஓட்டுநராக பணிபுரிபவர் ஹரிதாஸ் படேல். இவர் கத்கோபர் - செம்பூருக்கு செல்லும் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று செம்பூருக்கு அருகில் இருக்கிற பெசன்ட் பார்க் சிக்னல் அருகே பேருந்தை ஓட்டிவந்தபோது படேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் நிலை தடுமாறிய பேருந்து அங்கிருந்த சிக்னல் கம்பத்தில் மோதி நின்றிருக்கிறது.

பேருந்தில் ஒன்பது பயணிகள் மட்டுமே இருந்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்று பெஸ்ட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் படேலை கத்கோபரில் உள்ள ராஜாவதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், தற்போது சுயநினைவுக்குத் திரும்பியுள்ள அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com