“இன்னும் திருமணம் ஆகவில்லை ”: மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற காவலர்

“இன்னும் திருமணம் ஆகவில்லை ”: மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற காவலர்
“இன்னும் திருமணம் ஆகவில்லை ”: மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற காவலர்
Published on

மும்பையில் திருமணம் ஆகவில்லை என்பதற்காக மூன்று மாடி கட்டடத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற போலீஸை சக காவலர்கள் மீட்டுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய போலீஸ் ஒருவர் நேற்று காலை 11.30 மணிக்கு தாதர் நகரில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏறி தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனைபார்த்த அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் கேட்டபாடில்லை.


இதனையடுத்து தகவலானது காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இருப்பினும் காவலர் கேட்கவில்லை. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவலர் ஒருவேளை கீழே விழுந்தால் அவரை காப்பாற்றுவதற்கு தரையில் பஞ்சு மெத்தைகளை விரித்துள்ளனர்.

இந்நிலையில் இறுதியாக தற்கொலைக்கு முயன்ற காவலரின் நெருங்கிய நண்பர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்த காவலர்கள் அவர்களை வைத்து சமாதானம் பேசி 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவரை கீழே இறக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் அதிகாரி வினோத் கூறும் போது “ அவருக்கு தனிமனித பிரச்னைகள் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com