முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துடன் பிரச்சனை ஏற்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழக-கேரளா இடையேயான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளிடம் பேசிய பினராயி விஜயன், “முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டால் இருமாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம். தமிழக-கேரள மக்கள் சகோதர, சகோதரிகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்”என்று பெருமிதத்துடன் கூறினார்.