சிறைக்கு செல்வதில் இருந்து தம்பியைக் காப்பாற்றிய முகேஷ் அம்பானி!

சிறைக்கு செல்வதில் இருந்து தம்பியைக் காப்பாற்றிய முகேஷ் அம்பானி!
சிறைக்கு செல்வதில் இருந்து தம்பியைக் காப்பாற்றிய முகேஷ் அம்பானி!
Published on

உச்ச நீதிமன்ற கெடு நிறைவடையும் நிலையில், எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் 550 கோடி ரூபாய் அனில் அம்பானி செலுத்தியதால், சிறைக்கு செல்வதை தவிர்த்தார்.

அனில் அம்பானியின், தொலைத்தொடர்பு நிறுவனங்களை பராமரிப்பதற்காக எரிக்சன் நிறுவனம் 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், ஒப்பந்தப்படி பணத்தை செலுத்தாத நிலையில், அனில் அம்பானி மீது எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அனில் அம்பானி, இன்றைக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 550 கோடி ரூபாயை செலுத்தாவிடில், 3 மாதம் சிறை செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், திடீர் திருப்பமாக, எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் வட்டித் தொகை 550 கோடி ரூபாயை அனில் அம்பானி நேற்று செலுத்தினார். பணம் கிடைத்ததை எரிக்சன் நிறுவனம் உறுதி செய்த நிலையில், இக்கட்டான நேரத்தில் செய்த உதவிக்காக, அண்ணன் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோருக்கு, அனில் அம்பானி நன்றி செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com