சுறுசுறுப்பு; கூர்மையான பார்வை ; உட்சபட்ச விசுவாசம்: அரியவகை முதோல் நாயை பற்றி தெரியுமா?

சுறுசுறுப்பு; கூர்மையான பார்வை ; உட்சபட்ச விசுவாசம்: அரியவகை முதோல் நாயை பற்றி தெரியுமா?
சுறுசுறுப்பு; கூர்மையான பார்வை ; உட்சபட்ச விசுவாசம்: அரியவகை முதோல் நாயை பற்றி தெரியுமா?
Published on

சுறுசுறுப்பு... கூர்மையான பார்வை.. உட்சபட்ச விசுவாசம்..  அரியவகை முதோல் நாயை பற்றி தெரியுமா?

முதோல் நாய்கள் கேரவன் நாய்கள் என்றும் அழைக்கப்படுகிறது. தக்காணப்பீட பூமி கிராமப்புறங்களில் இந்த நாய்கள் கர்வானி என அறியப்படுகிறது. வேட்டை மற்றும் பாதுகாப்பு ஆகிய இருத்தேவைகளுக்கும் முதோல் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை நாயின்  முன்னங்கால்கள் நீளமாகவும், பின்னங்கால்கள் நீளமாக அதே நேரத்தில் அகன்ற வடிவில் இருக்கும்.

வலிமையான மார்பகங்களை கொண்ட இவ்வகை நாயின் வால்பகுதி வளைந்து அடிப்பகுதி சிறுத்தும் காணப்படும். கூர்மையான, பெரிய அளவிலான கருமை நிற மூக்கை கொண்ட முதோல் நாயின் தலை நீண்டு குறுகியும், காதுகளிடன் பரந்தும் இருக்கும்.

முட்டை வடிவிலான கண்களை கொண்ட இந்த நாயானது, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவின் சில இடங்களில் கிடைக்கிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் முதோல் தாலுகாவில் இந்த நாய்கள் சந்தைப்படுத்துதலுக்காக அதிகமாக வளர்க்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பாதுகாப்புத் தேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய நாய் என்ற பெயரைப் பெற்றது.

இந்திய ராணுவம் மட்டுமல்லாது சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப். பி.எஸ்.எப், எஸ்.எஸ்.பி, ஐடிபிபி, சில மாநிலங்களில்  காவல்துறையினரும் இந்த நாய்களை பயன்படுத்துகின்றனர்.அதிக நோய் எதிர்ப்பு சக்திக்கொண்ட முதோல் நாய்கள் உரிமையாளருக்கு உச்சபட்ச விசுவாசத்தை வழங்கக்கூடியவை. சகிப்புதன்மையுடன், அதிகபட்ச சுறுசுறுப்பையும் கொண்ட இந்த வகை நாய் ஆழமாக கடிக்கும் திறன் கொண்டது.

வெப்பமண்டல பிரதேசங்களில் திறமிகு செயலாற்றக்கூடிய இந்த நாய்கள் குளிர் பிரதேசங்களில் அதே அளவு செயல் திறனை காட்டுவதில்லை. கடந்த வருடம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதோல் நாயை பற்றி பெருமையாக பேசினார். முதோல் நாயை சிறப்பிக்கும் வகையில், 5 ரூபாய் நோட்டுகளில் தபால் தலை வெளியிட்டு இந்திய அஞ்சல் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு சார்பில் இரண்டு ஆண் நாய் குட்டிகளும், இரண்டு பெண் நாய் குட்டிகளும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான ஓடுதளங்களில் பறவைகள் மற்றும் பிற விலங்குகளை கண்காணிக்க இந்த வகை நாய்கள் பயன்படுத்த இருக்கின்றன

- கல்யாணி பாண்டியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com