மத்திய பிரதேச மாநில பாஜக ஊடக பொறுப்பாளர் நீரஜ் சாக்யா மற்றும் 7 பேரை ஆன்லைன் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக போபால் இணைய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து லாலு பிரசாத்தின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த மிசா பாரதியின் ட்விட்டரில், “பாஜக தலைவர்களுக்கு ஆன்லைன் செக்ஸ் மோசடியில் தொடர்பு இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பாஜக தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன்கூட தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாஜக மற்றவர்களை நோக்கி விரல்களை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு முன், தனது தலைவர்களுக்கு ஆன்லைன் செக்ஸ் மோசடி போன்ற குற்றச்செயல்களில் எப்படி தொடர்பு ஏற்பட்டது, ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று அவர் ட்விட்டரில் கூறிள்ளார்.