“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..!

“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..!
“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..!
Published on

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 113 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தில் முன்னணியில் உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தம் 230 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை. ஆனால் 113 இடங்களில் வெற்றி கண்டுள்ள காங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் முன்னணியில் உள்ளது. இங்கு தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமாயின் மொத்தமாக 114 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும். 109 இடங்களில் பாஜக வெற்றி கண்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ் வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. அதேசமயம் 2 இடங்களை பெற்றுள்ள பகுஜன் சமாஜ், 1 இடங்களை கைப்பற்றியுள்ள சமாஜ்வாதி ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் 109 இடங்களில் வென்றுள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் சார்பில் நேரம் கோரப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பின்னரே நேரம் ஒதுக்கப்ப‌டும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு எழுதியிருந்த கடிதத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளது என்றும், கூடுதலாக சுயேட்சை ‌வேட்பாளர்கள் காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பின்னரே நேரம் ஒதுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com