பல்கலைக் கழகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இருப்பதை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ரோகித் வேமுலா மற்றும் பாயல் தட்வி ஆகியோரின் தாயார் இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையில் பாகுபாடுகள் இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பல்கலைக்கழங்களில் இருப்பதை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரோகித் வேமுலா மற்றும் பாயல் தட்வி ஆகியோரின் தாயார் இருவரும் தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுவில், “பல்கலைக்கழங்களில் தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சாதி அடிப்படையிலான பல தாக்குதல் மேற்கொள்ள படுகிறது. இந்தச் சம்பவங்கள் ஒருவரின் அடிப்படை உரிமைகளை பரிக்கும் வகையில் உள்ளன. மேலும் இவை அனைத்து பல்கலைக்கழகத்திற்கு என்று யுஜிசி விதித்துள்ள சமுத்துவ விதிகளுக்கு புரம்பாக இருக்கின்றன. ஆகவே நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழங்களில் சாதி அடிப்படையில் நடைபெறும் சம்பவங்கள் தடுக்கப்படவேண்டும். அத்துடன் பல்கலைக்கழகங்களில் சமுத்துவத்தை நிலை நிறுத்த ஒரு குழுவையும் அமைக்க வேண்டும்” எனக் கூறிப்பிடப்பட்டுள்ளது.
ரோகித் வேமுலா ஹைதராபாத் பல்கலைக்கழக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சாதி அடிப்படையிலான சம்பங்களால் தற்கொலை செய்து கொண்டவர். அதேபோல மருத்துவம் படித்து வந்த பாயல் தட்வி தனது கல்லூரியில் நடைபெற்ற சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை காரணமாக கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.