5 குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசிய தாய் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

5 குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசிய தாய் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
5 குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசிய தாய் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
Published on

உத்தரபிரதேச மாநிலத்தில் 5 குழந்தைகளை பெற்ற தாயே ஆற்றில் தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் போதோகி மாவட்டம் ஜெகன்கிராபாத் என்ற இடத்தில் கங்கை ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆற்றில் ஒரு பெண் தனது 5 குழந்தைகளை தூக்கி வீசியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவரை கைது செய்துள்ளோம் எனவும் தெரிவித்தனர். மேலும், தற்போது குழந்தைகளை கண்டறிவதே முக்கியம் எனவும் பிற விசாரணை பின்னர் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினர்.

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் சிலர் கூறுகையில் ஊரடங்கு உத்தரவால் அந்த பெண்ணிற்கு வருமானத்திற்கு வழியில்லை எனவும் தினக்கூலி வேலைக்கு செல்லும் அந்த பெண் மற்றும் குழந்தைகள் கடந்த சில நாட்களாக பட்டினியால் வாடி வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com