காயமடைந்த கன்றுக்குட்டி சிகிச்சை பெறும்வரை, கண்ணீரோடு காத்திருந்த தாய்ப்பசு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தில், பிறந்த இரண்டு மாதமான கன்றுகுட்டி ஒன்றுக்கு காயம். அதன் காரணமாக மயங்கியது குட்டி. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்ப்பசு, கத்தியது. வீட்டுக்காரர்கள் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்கள் விரைந்து வந்து பரிசோதித்தனர். மயங்கும் நிலையில் கன்றுக்குட்டி இருந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு ஒரு மினி டெம்போவில் தூக்கிப் போட்டு கொன்று சென்றனர். உடனே தாய்ப்பசுவும் கன்றுக் குட்டி பின்னாலேயே கால்நடை மருத்துவமனை நோக்கி ஓடியது. டெம்போ வேகமாக ஓடியதும் இதுவும் வேகமாக ஓடியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் கன்றுகுட்டி பின்னாலேயே ஓடிய அந்தப் பசுவின் தாய்ப்பாசம் நெகிழ வைத்தது.
பின்னர் மருத்துவமனையில் கன்றுகுட்டிக்கு இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவரை தாய்ப்பசுவும் வெளியே காத்திருந்துள்ளது. சிகிச்சை முடிந்து வந்த பின், அதை நாக்கால் நக்கி அன்பை வெளிப்படுத்திய தாய்ப்பசு, பின் மகிழ்ச்சியாக வீட்டை நோக்கி நடந்து சென்றுள்ளது.