’ஜெய் ஸ்ரீராம்' கோஷத்துடன் மகாராஷ்டிராவில் இடிக்கப்பட்ட மசூதி.. வைரலாகும் வீடியோ.. பின்னணியில் யார்?

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம் கஜாபூர் கிராமத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி தற்போது சேதப்படுத்தப்பட்டிருக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மசூதி
மசூதிஎக்ஸ் தளம்
Published on

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம் கஜாபூர் கிராமத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி தற்போது சேதப்படுத்தப்பட்டிருக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘மசூதியின் சுவர்களில் ஏறி, காவி கொடியை நடுவதுடன், சுத்தியால் மினாரா தாக்கப்படுகிறது. மேலும், 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்டபடி மசூதிக்குள் நுழையும் அந்தக் கும்பல் அங்கிருக்கும் அனைத்தையும் அடித்து நொறுக்குகிறது. இதில் மசூதியின் சில பகுதிகள் சேதமடைந்ததுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் சிதறி கிடக்கின்றன. மசூதிக்கு வெளியேயும் நின்றிருந்த வாகனம் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் இம்ரான் சனாதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், ”மசூதி சேதப்படுத்தப்பட்டதுடன் முஸ்லிம் மக்களும் தாக்கப்பட்டனர். இதில் 40 முஸ்லிம் மக்களும் 6 வயது குழந்தை ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பொதுவாக இந்த தாக்குதலில் முஸ்லிம் குறிவைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு

மசூதி
டெல்லி | இடிக்கப்பட்ட மசூதி... மனித சங்கிலி போராட்டத்தில் இறங்கிய மக்கள்! என்ன நடந்தது?

இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி போராட்டமும் நடத்தியுள்ளன. அதன்பேரில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோலாப்பூரின் காவல் கண்காணிப்பாளர் மகேந்திர பண்டிட், ”அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்கும் விதமாக இப்பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கஜாபூர் கிராமத்தில் இருந்து விஷால்காட் கோட்டை, மலையடிவாரத்தில் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், விலங்கு வதையைத் தடை செய்யக் கோரியும் இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அந்தக் கும்பல்தான் மசூதியைத் தாக்கியதாக முஸ்லிம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் முன்னாள் ராஜ்யசபா எம்பி சம்பாஜிராஜே சத்ரபதி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மசூதி இடிப்பு வீடியோவை ஐதராபாத் எம்.பி ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருப்பதுடன் அதற்கும் கண்டனமும் தெரிவித்துள்ளார். அவர், "மகாராஷ்டிரா மாநில அரசு தாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 50 தோட்டாக்களை வாங்கி பக்கா பிளான்! ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரின் பகீர் பின்னணி!

மசூதி
நியூசிலாந்து மசூதி தாக்குதல் வீடியோவை மீண்டும் பரப்பியவருக்கு சிறை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com