இந்திய நாட்டில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரகள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார். 2011 இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் இந்தியாவில் இருப்பதாக எழுத்து பூர்வமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 2,21,673 பேர் ஆண்கள், 1,91,997 பேர் பெண்கள். நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில் அதிகளவிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர். மொத்தம் 81,224 பேர் மேற்கு வங்கத்தில் உள்ளனர்.
தொடர்ந்து உத்தர பிரதேசம், ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. தலைநகர் டெல்லியில் 2,187 பேர் உள்ளனர். லட்சத்தீவில் 2 பிச்சைக்காரர்கள் தான் உள்ளனர்.