இந்தியாவிற்கு மேற்படிப்பிற்காக வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயில்வதற்காக 47 ஆயிரத்து 427 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 2017-18-ஆம் ஆண்டில் 46 ஆயிரத்து 144 வெளிநாட்டு மாணவர்களும், இந்திய பல்கலைக்கழகங்களில் பயில பதிவு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2016-17ஆம் ஆண்டு அதிக அளவாக 47 ஆயிரத்து 575 வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் பயில பதிவு செய்திருந்ததாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.