கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் அண்மையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 2 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நடைபெறும் மாவோயிஸ்ட் தாக்குதல்களுக்கு தெலங்கானாவை சேர்ந்த கணேஷ் உய்கி எலியாஸ் அனுமந்து என்பவர்தான் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா 2013ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்டிருந்த நிலையில் அதிலும் இந்த நபருக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் இவரிடம் உள்ளது. கேரள மாநிலம் பனசுரா மற்றும் கபனி பகுதிகளில் 18 மாவோயிஸ்ட்கள் தற்போது இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிக்க: நடிகை ராஷ்மிகா போலி வீடியோ: டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ்!