உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை குரங்குகள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் மருத்துவக்கல்லூரியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இருந்து உணவுப்பொருட்களை பறிப்பது, மருத்துவர்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் உணவுப்பொருட்கள் என நினைத்துக் கொண்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை குரங்குகள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரத்தமாதிரிகளை சேகரிக்கும் ஊழியரைத் தாக்கி அவரிடம் இருந்து 3 ரத்த மாதிரிகளை பறித்துச் சென்ற குரங்குகள் அதனை உணவு என உடைத்துள்ளன. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக்குரங்குகள் மூலம் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மருத்துவமனை சுற்றுவட்டார மக்கள் உள்ளனர்.