நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டபாரஸி கிராமத்தை ஓட்டிய வனப்பகுதியில், கடந்த ஒரே வாரத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குரங்குகள் அனைத்தும் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும் கிராம மக்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உண்மையான காரணம் தெரிந்துவிடும் என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன் இதற்கு மேல் குரங்குகள் எவ்வாறு இறக்கின்றன என்பதை கண்காணிக்க, வனத்துறை சார்பில் சிறப்புக்குழுவும் அமைக்கப்படவுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.